முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர் குறித்து இழிவாக பேசிய திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கோவையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

கோவை: திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, கோவையில் அதிமுக வினர் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, கோவையில் அதிமுக வினர் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சமீபத்தில், கோவையில் பல்வேறு இடங்களில், தி.மு.க.தலைவர் ஸ்டாலின், பொது செயலாளர், துரைமுருகன், எம் பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டிக்கும் வகையில், கடந்த 27 ஆம் தேதி, கோவையில் தி.மு.க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய, உதயநிதி ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் மீது காவல் துறையின் அனுமதியை மீறி கூட்டம் நடத்தியது, அவதூறாக பேசியது, பேரிடர் காலங்களில் நோய் பரப்பியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்



அமைச்சர் எஸ் பி வேலுமணியை அவதூறாக பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுகவின் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகளை கண்டித்து, அதிமுக சார்பில் கோவை மாநகரில் 25 க்கும் மேற்பட்ட இடங்களில் 10000 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உதயநிதி ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சரை இழிவு படுத்தி பேசியதை வன்மையாக கண்டிப்பதாகவும், ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சிி திமுக என்று கோஷங்கள் எழுப்பினர்.



மேலும், 2ஜி ஊழலில் எம் பி ராஜாவும், கனிமொழியும் சிறைக்கு செல்வார்கள் எனவும், சர்க்காரியா உழல் என்னாச்சு..? என்பது போன்ற பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கோவையில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக, மீது வழக்கு பதிந்த காவல் துறை, தற்போது போராட்டம் நடத்தும் அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்வார்களா? என்று திமுக கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், நா கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்.



எதிர் கட்சியை கண்டித்து ஆளும் கட்சியினர் நடத்தும் இந்த போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...