கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளில் வழக்குபதிவு!

கோவை: கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளில் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளில் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.



திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், போஸ்டர்களை கிழித்த திமுக இளைஞர் அணியினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு அதிமுக அரசுக்கு எதிராகவும், காவல்துறையை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.



இந்த நிலையில், கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கார்த்திக் MLA, சி.ஆர்.ராமச்சந்திரன், பையா கவுண்டர், சேனாதிபதி, தென்றல் செல்வராஜ், பைந்தமிழ் பாரி, கோட்டை அப்பாஸ் பொள்ளாச்சி எம்.பி.சண்முக சுந்தரம் ஆகிய 9 பேர் மீது தடை உத்தரவை மீறுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, நீட் தேர்வு குறித்து கிராமப்புற மாணவர்களுக்கு அச்சத்தை உருவாக்கி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 5 சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கார்த்திக் எம்.எல்.ஏ, பையா கவுண்டர், சேனாதிபதி, சி.ஆர்.ராமச்சந்திரன், தென்றல் செல்வராஜ், சண்முகசுந்தரம் எம்பி, கோட்டை அப்பாஸ் ஆகிய 7 திமுக மாவட்ட நிர்வாகிகள் மீது தடை உத்தரவை மீறி அனுமதி பெறாமல் ஒன்று கூடுதல் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்யும் வகையில் மேடை அமைத்தல், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து கொரோனா தொற்று பரவும் என தெரிந்தும் தனிநபர் இடைவெளி இன்றியும் முக கவசம் அணியாமலும் செயல்படுதல், அத்துமீறி மேடையில் நகரின் அழகை குலைக்கும் பிளக்ஸ் போர்டு அமைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...