நீலகிரியில் இன்று புதிதாக 81 பேருக்கு கொரோன தொற்று..! மொத்த பாதிப்பு 6,490 ஆக உயர்வு!

நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 81 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 81 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றுடைய நபர்கள் வெளியே சென்று வருவதால் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 81 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,490 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, தொற்று உறுதியாகியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் இன்று 29 பேர் நோய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 6,156 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 296 பேர் மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீலகிரியில் இதுவரை கொரோனாவுக்கு 38 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...