கோவையில் அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களுடன்‌ திடக்கழிவு மேலாண்மை பணிகள்‌ குறித்து ஆலோசனைக்‌ கூட்டம்‌!

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களுடன்‌ திடக்கழிவு மேலாண்மை பணிகள்‌ குறித்து ஆலோசனைக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., தலைமையில்‌ இன்று நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களுடன்‌ திடக்கழிவு மேலாண்மை பணிகள்‌ குறித்து ஆலோசனைக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., தலைமையில்‌ இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது,

கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள்‌ 2016-ன்படி தினசரி 100 கிலோ எடைக்கு மேலான திடக்கழிவுகளை உற்பத்தி செய்யும்‌ ஹோட்டல்‌ மற்றும்‌ வணிக நிறுவனங்கள்‌ அவர்களாகவே திடக்கழிவுகளை மேலாண்மை செய்ய வேண்டும்‌ எனவும் மாநகராட்சியிடம்‌ வழங்கக்‌ கூடாது என்றார்.

இது தொடர்பான அறிவியல்‌ சார்ந்த உத்திகளை மாநகராட்சி வழங்கும்‌ எனவும் அனைத்து ஹோட்டல்‌ மற்றும்‌ வணிக நிறுவனங்களிலும்‌ கருப்பு கலர்‌ பாலித்தீன்‌ கவர்களை உபயோகிக்கக்காமல்‌, மக்கும்‌, மக்கா குப்பைகளை தனித்தனியாக பெட்டிகளில்‌ சேகரித்து மாநகராட்சி வண்டிகளில்‌ ஒப்படைக்க வேண்டும்‌ என்று தெரிவித்தார்.

மேலும், குப்பைக்‌ கழிவுகளை குப்பைத்தொட்டியிலோ அல்லது வெளியிலோ கொட்டுவதை சுகாதார ஆய்வாளர்கள்‌ மூலம்‌ கண்டறியப்பட்டால்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌ எனவும் மக்கும்‌, மக்கா குப்பைகளை தரம்‌ பிரித்து தனித்தனியாக வழங்கப்பட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்.

அதனைத்‌ தொடர்ந்து அனைத்து மண்டல சுகாதார அலுவலா்களுடன்‌ மாநகராட்சியில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மை பணிகள்‌ மற்றும்‌ திடக்கழிவு மேலாண்மை பணிகள்‌, நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையங்கள்‌ குறித்து மண்டல வாரியாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ ஆய்வு செய்தார்.



இந்த ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி, செயற்பொறியாளர்‌ (ஸ்மார்ட்‌ சிட்டி) சரவணக்குமார்‌, சுகாதார ஆய்வாளர்‌ தூய்மை இந்தியா திட்டம்‌ திருமால்‌, அனைத்து மண்டல சுகாதார அலுவலா்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...