கோவை: திமுக தலைவர் மற்றும் பொதுச் செயலாளரை விமர்சனம் செய்து போடஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில், அமைச்சர் வேலுமணி மற்றும் காவல் துறையை கண்டித்து கோவையில் திமுக ஆர்ப்பாட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மேடையை காவல் துறையினர் அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை காந்திபுரம், உக்கடம், ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டலடிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.
திமுக தலைவர் ஸ்டாலினை இம்சை அரசன் 23 ம் புலிகேசியாகவும், திமுக பொதுச்செயலாளர் துரை முருகனை மங்குனி அமைச்சராகவும் சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் தன்னம்பிக்கை மிக்க தலைமையா?, துண்டுச்சீட்டு தலைமையா என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதேபோல மற்றொரு சுவரொட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி படத்துடன் உழைப்பை நம்பலாமா?, பிறப்பை நம்பலாமா என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
அதேசமயம், திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டலடிக்கும் வகையிலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில், எந்த அமைப்பின் சார்பாக ஒட்டப்பட்டது என்பது குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை.
இதையடுத்து, காந்திபுரம், ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த இந்த சுவரொட்டிகளை திமுகவினர் கிழித்து எறிந்தனர்.
இந்நிலையில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு சுவரொட்டியை கிழித்ததோடு, அதிமுக பகுதி செயலாளர் சீனிவாசன் என்பவரை இழிவாக பேசியதாக பஷீர் என்பவரை ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல செல்வபுரம் பகுதியில் சுவரொட்டிகளை கிழித்த மின்னல் சிவா, கேபிள்மணி உள்ளிட்ட 4 பேர் மீது செல்வபுரம் காவல் துறையினரும், குனியமுத்தூர் பகுதியில் 7 பேர் மீது குனியமுத்தூர் காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 12 பேரும் ஜாமினில் விடுவித்தனர்.
இதனிடையே, சுவரொட்டிகளை கிழித்த திமுகவினரை காவல் துறையினர் கைது செய்ததைக் கண்டித்து, தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென திமுகவினர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேடையை அகற்றக்கோரி காவல் துறையினர் வலியுறுத்தினர். அப்போது, மேடை மற்றும் பேனரை அகற்ற முயன்ற காவல் துறையினருக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை அறிந்த தொண்டர்கள் அமைச்சர் வேலுமணியையும், காவல் துறையையும் கண்டித்து கோசங்களை எழுப்பிய வண்ணம் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், உதயநிதி ஸ்டாலின் வருகையின் போது திமுக தலைவரை விமர்சித்து ஒட்டப்பட்ட பேனரை கிழித்தெறிந்தனர்.