சாத்தான்குளத்தில் ஜெயராஜ்‌ மற்றும்‌ பென்னிக்ஸ் மீது இரவு முழுவதும் கொடூர தாக்குதல்..! பல இடங்களில் ரத்தக் கசிவு - சிபிஐ அறிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம்‌ சாத்தான்குளத்தில்‌ ஜெயராஜ்‌ மற்றும்‌ பென்னிக்ஸ்‌ காவலர்களால்‌ கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்‌ தேசத்தையே அதிர்ச்சியில்‌ ஆழ்த்தியிருந்தது.


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம்‌ சாத்தான்குளத்தில்‌ ஜெயராஜ்‌ மற்றும்‌ பென்னிக்ஸ்‌ காவலர்களால்‌ கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்‌ தேசத்தையே அதிர்ச்சியில்‌ ஆழ்த்தியிருந்தது.

இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ எஃப்‌.ஐ.ஆர்‌ பதிவு செய்துள்ளது. அதில், சாத்தான்குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌ ஜெயராஜ்‌, மகன்‌ பென்னிக்ஸின்‌ கொடூர சித்ரவதை பற்றி சிபிஐ எஃப்‌.ஐ.ஆரில்‌ அம்பலமாகியுள்ளது.

கடந்த ஜூன்‌ 16ம்‌ தேதி இரவு 7.30 மணி அளவில்‌ வணிகர்கள் ஜெயராஜ்‌, மகன்‌ பென்னிக்ஸை சாத்தான்குளம்‌ போலீஸ்‌ கைது செய்தது. காவல்‌ நிலையத்தின்‌ அறையில்‌ ஆடைகளை களைந்து தந்தையையும் மகனையும்‌ காவலர்கள்‌ தாக்கி உள்ளனர்‌. குறிப்பாக ஜெயராஜ்‌, பென்னிக்ஸை மேஜை மீது குனிய வைத்து பின்புறத்தில்‌ காவலர்கள் கொடூரமாக அடித்துள்ளனர்‌.

மேலும், இருவரையும்‌ திமிரவிடாமல்‌ 3 காவலர்கள் பிடித்துக் கொள்ள ஆய்வாளர்‌ ஸ்ரீதர், காவலர்‌ முத்துராஜா அடித்துள்ளனர். தந்தையையும்‌ மகனையும்‌ மாறி மாறி போலீசார் தாக்கியதில்‌ ரத்தம்‌ கொட்டத்‌ தொடங்கியது.

ரத்தம்‌ சொட்ட சொட்ட 2 பேரையும்‌ போலீஸ்‌ கொடூரமாக தாக்கி உள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது. சாத்தான்குளம்‌ தந்தை, மகன்‌ கொலை வழக்கு முதல்‌ தகவல்‌ அறிக்கையில்‌ நெஞ்சைப் பதற வைக்கும்‌ தகவல்கள்‌

வெளியாகியுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...