திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நிலுவை சம்பள தொகை மற்றும் தீபாவளி போனஸ் உள்ளிட்டவற்றை வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலும் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச சம்பளம் 510 ரூபாய் என்பதை மாநகராட்சி வழங்க மறுத்து வருவதாகவும், உடனடியாக மாவட்ட ஆட்சியர் அறிவித்த சம்பளத்தை வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகை நெருங்கி வரக் கூடிய சூழ்நிலையில் போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.