கோவை: கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், எல்லையோரம் உள்ள கோவை மாவட்ட சோதனை சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட நிர்வாகம் எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக கோவையில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது தினமும் 300 பேர் வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கோவை அருகில் உள்ள கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் என்ற போதிலும் கேரளாவில் இருந்து பலர் சோதனை சாவடிகளை கடந்து கோவை வந்து செல்கின்றனர். இதனால் கோவையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள வாளையார், வேலந்தாவளம், மீனாட்சிபுரம், ஆணைக்கட்டி உள்ளிட்ட 14 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்புப் பணியை மாவட்ட நிர்வாகத்தினர், காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட சுகாதார துறையினர் கூறுகையில், கோவை-பாலக்காடு சாலையில் உள்ள வாளையார் சோதனைச்சாவடி, கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்வதற்கு முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த சாலை வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வாறு கேரளாவில் இருந்து தமிழகத்தின் கோவைக்குள் நுழைபவர்கள் இ-பாஸ் இருந்தால் மட்டும் தான் அனுமதிக்கப்படுகின்றனர். இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இதில் சளி, இருமல், காய்ச்சல் அறிகுறி இருந்தால், சுகாதாரத்துறையினர் மூலம் அவர்களது முகவரி விவரம் சேகரிக்கப்பட்டு, உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சோதனை சாவடி வழியாக வராமல், வனப்பகுதிகளில் நுழைந்து கோவைக்குள் நுழைவதைத் தடுக்க, வனத்துறையினர் மூலம் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், கேரள எல்லையில் வசித்து, தினமும் வேலைக்காக கோவைக்குள் வந்து செல்பவர்களிடம் தினமும் இ-பாஸ் கேட்டு கட்டாயப்படுத்தப்படுவதில்லை. அதேபோல், சுற்றுலாத் தளமான வால்பாறை எல்லையில் நுழைவதற்கு இ-பாஸ் பரிசோதிக்கப்படுகிறது. வால்பாறையை வசிப்பிடமாக கொண்டவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. அவர்கள் ஆதார் அட்டை காட்டினால் மட்டும் போதும். இவ்வாறு அவர்கள் கூறினர்.