கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் ஒரே நிலைப்பாட்டில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் - காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

திருப்பூர்: தமிழகம் முழுவதும் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக திருப்பூரில் திருடர் கூட்டம் என்ற தலைப்பில் குறும் படத்தை வெளியிட்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: தமிழகம் முழுவதும் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக திருப்பூரில் திருடர் கூட்டம் என்ற தலைப்பில் குறும் படத்தை வெளியிட்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள பாஜக சேவை மையத்தில் இந்து முன்னணி சார்பில் குறும்படம் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருடர் கூட்டம் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள குறும்படத்தை வெளியிட்டார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஏராளமான கோயில்களின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதற்கு ஆண்ட கட்சியும் ஆளும் கட்சிகளுமே காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும், திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் காவலர் குடியிருப்பு கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துவரக் கூடிய சூழ்நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அங்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது கண்டனத்துக்கு உரியது எனவும் இதை கண்டித்து நவம்பர் 2-ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

இதேபோல, தமிழகம் முழுவதுமே கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும் இதற்கு திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் துணை போயுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இதன்பின் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் இந்து முன்னணியில் இணையும் விழாவும் நடைபெற்றது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...