கோவை: கோவையில் ஆர்.எஸ்.எஸ் அகில இந்திய தலைவர் பாதுகாப்பிற்கு சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்ட வசமாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உயிர் தப்பினர்.
கோவை: கோவையில் ஆர்.எஸ்.எஸ் அகில இந்திய தலைவர் பாதுகாப்பிற்கு சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்ட வசமாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உயிர் தப்பினர்.
கோவையில் நாளை நடைபெறும் கேரள ஆர்.எஸ்.எஸ் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் ஆரிய வைத்திய பார்மசி தலைவர் பத்ம ஸ்ரீ கிருஷ்ணகுமாருக்கு அஞ்சலி செலுத்த இன்று மதியம் 2 மணியளவில் கோவை விமான நிலையம் வரும் ஆர்.எஸ்.எஸ் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் ஆரிய வைத்திய பார்மசி தலைவர் பத்ம ஸ்ரீ கிருஷ்ணகுமார் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர், அங்கிருந்து சிறுவாணி சாலையில் அமைந்துள்ள சின்மையா வித்யாலயா சர்வதேச உண்டு உறைவிட பள்ளிக்கு செல்கிறார். இன்று இரவு அங்கு தங்கும் அவர் நாளை கேரள ஆர்.எஸ்.எஸ் மாநில செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
இதில் 20 செயற்குழு பங்கேற்க உள்ளனர். மூன்று தினங்கள் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் 29ம் தேதி கோவையில் இருந்து மீண்டும் டெல்லி செல்ல உள்ளார்.
இந்த நிலையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மோகன் பகவத்தின் பாதுகாப்பிற்கு சென்ற வாகனம் பேரூர் பச்சாபாளையம் அருகே எதிரில் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதுவதை தவிர்க்க, ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்ததன் காரணமாக வாகனம் தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக இந்த வாகனத்தில் பயணம் செய்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் எந்தவிதமான பாதிப்புமின்றி உயிர் தப்பினர்.