கோவை: கோவையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த இன்ஜினியர் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி நவாவூர் பிரிவு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(41) கட்டுமான பொறியாளர் பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். நேற்று முன்தினம் சதீஷ்குமார் வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக கால் தடுமாறி மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, சதீஷ்குமாரை மீட்ட அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சதீஷ்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குர்ஆன் (35). இவர் சிறுமுகை பகுதியில் தங்கி தோட்ட வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இவர் ஆலங்குளம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற போது, எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார் இதில் சுரேஷ் நீரில் முழுகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.