கோவையில் தனியார் தென்னை நார் தயாரிப்பு கம்பெனியில் பயங்கர தீ விபத்து - ஐந்து மணிநேரமாக போராடி தீயை அணைத்தனர்!

கோவை: கோவையில் தனியார் தென்னை நார் தயாரிப்பு கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், ஐந்து மணிநேரமாக போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.


கோவை: கோவையில் தனியார் தென்னை நார் தயாரிப்பு கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், ஐந்து மணிநேரமாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.



கோவை அடுத்த மலைபாளையம் பகுதியில் உள்ள தனியார் தென்னை நார் தயாரிப்பு நிறுவனத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

இந்த தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அந்த கம்பெனியில் அரசு விதிமுறைக்கு மீறி இருப்பை வைத்திருந்ததால் நேற்று ஆயுத பூஜை செய்யும் பொழுது தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் கம்பெனி இருக்கும் பகுதியில் இருந்து செஞ்சேரிமலை வரை சுமார் மூன்று கிலோமீட்டர் அளவிற்கு புகை சூழ்ந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு இரண்டு வாகனங்கள் மட்டுமே வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்த அவர்கள், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் மற்றும் கம்பெனியில் பணிபுரிபவர்கள் யாரும் நிறுவனத்தின் உள்ளே இல்லாத காரணமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகவும் அதிக புகையின் காரணமாக அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தெரிவித்தனர். மேலும், அதிக தென்னை நார் இருப்பு வைத்திருந்ததே தீப்பற்றியதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...