கோவையில் வித்தியாரம்பம் நிகழ்ச்சியில் கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளின் நாக்கில் தங்க ஊசியால் எழுதும் நிகழ்வு ரத்து!

கோவை: கோவையில் நடைபெற்ற வித்தியாரம்பம் நிகழ்ச்சியில் கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளின் நாக்கில் தங்க ஊசியால் எழுதும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.



கோவை: கோவையில் நடைபெற்ற வித்தியாரம்பம் நிகழ்ச்சியில் கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளின் நாக்கில் தங்க ஊசியால் எழுதும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.



விஜயதசமியன்று குழந்தைகளுக்கு கல்வியை துவங்கினால் சிறப்பாக இருக்கும் என்பது பொது மக்களின் நம்பிக்கை. இதனையொட்டி, கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் எழுத்தாணிப்பால் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



காலை முதலே ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து கோவிலில் வழிபட்ட பின்னர் அரிசியில் "ஓம்" மற்றும் "அ" போன்ற எழுத்துக்களை எழுதியும் தங்களது குழந்தைகளின் கல்வியை தொடங்கினர்.



இன்றைய தினத்தில் கல்வியை துவங்கினால் சிறப்பு என்பதால் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து கல்வியை துவங்கியிருப்பதாக குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர். வழக்கமாக வித்யாரம்பம் நடக்கும் போது குழந்தைகளின் நாவில் தேன் தொட்டு தங்க ஊசியால் "ஓம்" மற்றும் "அ" போன்ற எழுத்துகள் எழுதப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக இந்த முறை "எழுத்தாணிப்பால்" எனப்படும் தங்க ஊசி கொண்டு நாவில் எழுதும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், கூட்டமாக பொது மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் வரிசையாக நிற்க வைத்து சமூக இடைவெளியுடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.



முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிந்து வர வேண்டும் என அறிவுறத்தபட்டு இருந்தது. அவற்றை அணிந்து வந்த பெற்றோர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். எழுத்தாணிப்பால் எனப்படும் நாக்கில் தங்க ஊசியால் எழுதும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருப்பது சிறிது வருத்தம் அளித்தாலும், கொரோனா நோய் தொற்று காலத்தில் விஜயதசமிக்காக கோயில்களில் இப்போது நடைபெறும் நிகழ்ச்சிகளும், மக்கள் அனுமதிக்கப்பட்டதுமே மகிழ்ச்சியாக இருப்பதாக கோவிலுக்கு வந்த பெற்றோர் தெரிவித்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...