வீரபாண்டி செல்லும் சாலையில் சாய்ந்த நிலையில் இரயில்வே தடுப்பு; அச்சத்துடன் கடந்து செல்லும் மக்கள்

கோவை: கோவை வீரபாண்டி பிரிவில், இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாதையின் உயர தடுப்பு சாய்ந்த நிலையில், கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதியை கடந்து செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்கிறார்கள்.

கோவை: கோவை வீரபாண்டி பிரிவில், இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாதையின் உயர தடுப்பு சாய்ந்த நிலையில், கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதியை கடந்து செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்கிறார்கள்.



கோவை வீரபாண்டி பிரிவில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். வீரபாண்டியில் இருந்து அன்னூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் இச்சாலை பயன்படுத்தப்படுகிறது. இதனிடையே, வீரபாண்டி பிரிவில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையின் குறுக்கே, கோவை- மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய ரயில் தடம் உள்ளது. 



இந்த ரயில் தடம் கீழ் பகுதியில் வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் சாலை அமைந்துள்ளது. இதனிடையே, ரயில்வே சுரங்கப்பாதை வழியாக கனரக வாகனங்கள் உயரம் அளவு தெரியாமல் மோதி விடாமல் இருக்க சுரங்க பாதை இரு புறங்களிலும் உயர தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. 



இதில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சில சமயங்களில் மோதி, அந்த தடுப்பு சேதமாவது வழங்கம். அதே போல், பல மாதங்களுக்கு முன் சேதமான அந்த உயர தடுப்பு, தற்போது சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதியில் செல்வோர் அச்சதுடன் பயணிக்கின்றனர்.



இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த நியூட்டன் என்பவர் கூறுகையில், "சுமார் ஆறு மாதத்திற்கும் மேலாக இந்த தடுப்பு சாய்ந்த நிலையில் தான் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளததால், பெரும் உயிர்சேதம் ஏதேனும் ஏற்படும் முன், அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக இதனை சீர் செய்ய வேண்டும்," என்றார்.

இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், " சேதமான நிலையில் உள்ள உயர தடுப்பு உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...