கோவை: நவராத்திரி விழாவின் கடைசிநாளான இன்று ஆன்லைன் வகுப்பு பொம்மைகள், கொரானா ஒழிய வேண்டி விநாயகருக்கு முககவசம், வெங்காயத்தின் விலை குறைந்து அனைவருக்கும் எளிதாக கிடைக்க வேண்டி கொலு பொம்மைகளுடன் வெங்காயத்தை படையல் வைத்து கோவையில் வழிபாடு நடத்தப்பட்டது.

நவராத்திரி விழாவின் போது அனைவரது வீட்டிலும் ஒன்பது நாட்கள் கொலு பொம்மைகள் வைத்து விரதமிருந்து சரஸ்வதி மற்றும் லட்சுமியை வழிபடுவது வழக்கம். தமிழ் மாதம் புரட்டாசியில் ஆரம்பித்து ஐப்பசி மாதம் வரை தொடர்ந்து 9நாட்கள் வெகுவிமர்சையாக இந்த நவராத்திரி விழா கொண்டாடபட்டு வருகிறது.
இந்த 9 நாட்களில் ஒவ்வொரு நாட்களும் நடன நிகழ்ச்சி, இசை பஜனை நிகழ்ச்சி, படையல் விருந்து உள்ளிட்டவைகளை செய்து கொலு பொம்மைகள் கொண்டு வீட்டை அலங்காரம் செய்து, உற்றார் உறவினர்களை வீட்டிற்கு அழைத்து உபசரிப்பது வழக்கம்.

பாரம்பரிய முறையிலான கொலு பொம்மைகள் என்பதைக் கடந்து, இப்போது நவீன காலத்துக்கு ஏற்ற கருத்தாக்கத்தின் அடிப்படையிலும் வைக்கப்படுகிறது. இன்று கடைசி நாளாக கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில், கோவை டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் இக்கால கட்டத்திற்கு ஏற்ப முதன் முறையாக, கொரோனா ஒழிய பிராத்தனை செய்து விநாயகருக்கு மாஸ்க் அணிவித்து, குழந்தைகளின் ஆன்லைன் வகுப்பு கஷ்டங்கள் உள்ளிட்ட பொம்மைகள், விவசாயம் மேன்மையடைய வேண்டும் என்பதை குறித்த பொம்மைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

தற்போது நாடு முழுவதும், வெங்காயத்தின் தட்டுப்பாடு காரணமாக வெங்காயத்தின் விலை என்பது தங்கத்தின் விலையை போன்று அனைத்து மக்களாலும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வெங்காயத்தின் விலை குறைந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்க வேண்டி கொலு பொம்மைகளுக்கு வெங்காயத்தை படையல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது என்பது, இந்த ஆண்டின் கூடுதல் சிறப்பம்சம்.

மேலும், ராவணன் தர்பார் மகாபாரத சட்ட சபை, ராமாயண கதை, பண்டைய கால விவசாயம், கலை, பண்பாடு, தொழில்கள் குறித்து விளக்கும் கொலு பொம்மைகள் பார்ப்போர் மனதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, சிறுமியர் மற்றும் பெண்கள் லட்சுமி மற்றும் சரஸ்வதியை வழிபடும் விதமாக பஜனை பாடல்கள் பாடினர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் என யாரையும் சந்திக்க முடியாத நிலையில், இந்த நவராத்திரி விழாவின் 9 நாளிலும் சுற்றத்தார் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடியது மகழ்ச்சியினை அளித்துள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.