திருப்பூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருப்பூரில் இந்து முன்னணியினர், அவரது உருவ படத்தை கிழித்து, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் இந்து முன்னணி அமைப்பு சார்பில், குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்து பெண்களை கொச்சையாக பேசியுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.
"மேலும், இந்து சாஸ்திரங்களில் இருக்கும் கருத்துகள் கொச்சையாக இருக்கின்றது, என பொய்யான கருத்தை தெரிவித்துள்ளார். இது வேண்டுமென்றே ஒரு மதத்தினரை புன்படுத்துவதாக உள்ளது. இது, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. எனவே, திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், திருமாவளவன் புகைப்படத்தை கிழித்து, அதை தீயிட்டு எரிக்க முயன்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.