அரசின் நலத்திட்டங்களை விமர்சனம் செய்யும் மு.க.ஸ்டாலின் பேச்சை தமிழக மக்கள் நகைச்சுவையாக தான் பார்க்கிறார்கள் - பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

பொள்ளாச்சி: அரசு செய்யும் நல்ல திட்டங்களை விமர்சனம் செய்யும் மு.க.ஸ்டாலின் பேச்சை தமிழக மக்கள் நகைச்சுவையாக தான் பார்க்கிறார்கள், என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்துள்ளார்.

பொள்ளாச்சி: அரசு செய்யும் நல்ல திட்டங்களை விமர்சனம் செய்யும் மு.க.ஸ்டாலின் பேச்சை தமிழக மக்கள் நகைச்சுவையாக தான் பார்க்கிறார்கள், என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்துள்ளார். 



பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பேரூராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விலையில்லாத மருந்து பெட்டகங்களை வழங்கினார். 

பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன் மக்களுக்கு இலவசமாக போடப்படும் என்று தமிழக முதல்வர் மக்கள் மீது உள்ள நல் எண்ணத்தின் அடிப்படையில் கூறியுள்ளார். இதையும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் பாராட்டாமல், விமர்சனம் செய்துள்ளார். 

தமிழக அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் மு.க.ஸ்டாலின் ஏட்டிக்குப் போட்டியாக பேசுவதையே, அவரது வேலையாக வைத்துள்ளார், என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். ஸ்டாலினின் பேச்சை தமிழக மக்கள் நகைச்சுவையாக தான் நினைக்கிறார்கள், என்று தெரிவித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...