மனுதர்ம நூலை தடை செய்யக் கோரி கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் - மனுதர்ம நூலை எரிக்க முயன்றதால் பரபரப்பு!

கோவை: மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனுதர்ம நூலை போராட்டக்காரர்கள் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனுதர்ம நூலை போராட்டக்காரர்கள் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம், எஸ்டிபிஐ உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

மேலும், நடிகை குஷ்பு மனுதர்ம நூலை முழுமையாக படிக்க வேண்டும் எனவும் தேவைப்பட்டால் அவருக்கு நூறு மனுதர்ம நூல்களை வாங்கி அனுப்ப தயாராக இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.



இந்த போராட்டத்தில் போது மனுதர்ம நூலை போராட்டக்காரர்கள் எரிக்க முயன்றபோது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...