கோவை: கோவையில் ஆயுத பூஜை, சரவஸ்தி பூஜை பண்டிகையை முன்னிட்டு பூக்கள் மற்றும் பழங்களின் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஆயுத பூஜையும், திங்கட்கிழமை சரஸ்வதி பூஜை பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பூக்கள், பழங்கள், அச்சு வெல்லம், பொரி உள்ளிட்டவற்றின் விற்பனை கோவையில் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், கோவை தேவாங்க பள்ளி மைதானத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள பூமார்க்கெட்டில் பூக்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பூக்கள் விலையும் உயர்ந்து காணப்பட்டது.
கோவையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1000-த்திற்கு விற்பனையானது. இதனால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கோவை பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், கோவை பூ மார்க்கெட்டுக்கு வழக்கமாக 40 முதல் 50 டன் வரை தான் பூக்கள் விற்பனைக்கு வரும். பண்டிகையை முன்னிட்டு நேற்று 100 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பூக்கள் வரத்து அதிகரித்த போதிலும் பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
கோவையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1000-த்திற்கும், சம்பங்கி ரூ.200- 300, கோழிக்கொண்டை பூ-160, வாடாமல்லி ரூ.70 முதல் ரூ.120 வரையும், அரளி பூ ரூ.340 முதல் ரூ.400 வரையும், செண்டு மல்லி ரூ.50 முதல் ரூ.110 வரையும் விற்பனையானது.
அதேபோல, செவ்வந்தி பூ ரூ.120, ரோஜா பூ ரூ.300, தாமரை பூ ஒன்று ரூ.15-க்கு விற்பனையானது. கொரோனா தொற்றை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் தற்போது தான் பூக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகிறது. இவ்வாறு பூ வியாபாரிகள் கூறினர்.

இதனிடையே, பூக்களை தொடர்ந்து பழங்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.130, மாதுளை ரூ.180, சாத்துக்குடி ரூ.40, ஆரஞ்சு ரூ.50 என விற்பனை செய்யப்பட்டது.
தற்போது மராட்டியம், நாக்பூர், சிம்லா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு அதிகமாக பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதுதவிர வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.40 முதல் ரூ.50-க்கும், அச்சு வெல்லம், கரும்பு சர்க்கரை ஆகியவை தலா ஒரு கிலோ ரூ.55-க்கும், பொரி ஒரு பக்கா ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.