பெண்கள் குறித்து இழிவாக பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து அன்னையர் முன்னணி அமைப்பினர் மாநகர காவல் ஆணையரிடம் புகார்!

கோவை: பெண்கள் குறித்து இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அன்னையர் முன்னணி அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.



கோவை: பெண்கள் குறித்து இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அன்னையர் முன்னணி அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.



மனுதர்மத்தில் பெண்கள் குறித்து சொல்லப்பட்டு இருக்கும் விடயங்கள் தொடர்பாக பெரியார் யூ டியூப் வலைக்காட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசி இருந்தார்.

இதனிடையே, திருமாவளவன் இந்து தர்மத்தில் இல்லாதவற்றை பேசி பெண்களை இழிவுபடுத்தி இருப்பதாக பா.ஜ.க மற்றும் இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில், கோவையில் இந்து முன்னணி அமைப்பின் மகளிர் அமைப்பான இந்து அன்னையர் முன்னணி சார்பில் இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அப்போது, திருமாவளவன் மீது அளிக்கப்பட்ட புகாரின் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பெண்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த இருப்பதாகவும், திருமாவளவன் தனது தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இந்து அன்னையர் முன்னணி அமைப்பினர் வலியுறுத்தினர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...