கோவையில் சிறுவன் தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதால் விபத்து - 14 வயது சிறுவன் உட்பட இருவர் பலி!

கோவை: கோவையில் தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக வாகனத்தை இயக்கி வாகன விபத்து ஏற்படுத்திய 14 வயது சிறுவன் மற்றும் எதிரில் வாகனம் ஓட்டி வந்தவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவையில் தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக வாகனத்தை இயக்கி வாகன விபத்து ஏற்படுத்திய 14 வயது சிறுவன் மற்றும் எதிரில் வாகனம் ஓட்டி வந்தவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமுகை ஜடயாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார்(32). மேட்டுப்பாளையம் அரசு பேருந்து பணிமனையில் பயணிகள் இருக்கைகள் சரி செய்யும் பணியில் ஒப்பந்ததாரராக உள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை 6:30 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் தனது ஹீரோ ஹோண்டா இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மேட்டுப்பாளையம் பங்களா மேடு பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் கெளதம்(14) ஹோண்டா ஆக்ட்டிவா வண்டியில் தனது நண்பரான புருஷோத்தமனுடன் தலைக்கவசம் அணியாமல் வேகமாக பயணித்துள்ளார்.

அப்போது, நவீன்குமார் ஓட்டி வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் பலமாக மோதியதில் மூவரும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, நவீன்குமார் மற்றும் கெளதம் ஆகியோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.

இவருடன் பயணித்த புருஷோத்தமன் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, உயிரிழந்த இருவரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதால் நேருக்கு நேர் மோதி மாணவன் மற்றும் ஒப்பந்ததாரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...