நீலகிரி: உதகை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாத காலமாக ஊதியம் வழங்காததை கண்டித்து உதகையில் இருந்து கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக மறியலில் ஈடுபட்டதால் மூன்று மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுற்றுலா நகரமான உதகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் அன்றாட தூய்மை பணிகளை மேற்கொள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, தற்காலிகமாக 200 தூய்மை தொழிலாளர்களை நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் அடிப்படையில் பணியில் அமர்த்தியுள்ளது.
இவர்கள் அன்றாடும் தூய்மை பணிகளை மேற்கொண்டு நகரத்தை சுத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில், உதகை நகராட்சியில் நிதி நெருக்கடி என காரணம் காட்டி 200 தற்காலிகத் தொழிலாளர்களுக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் எவ்வித பதிலும் தராத நிலையில், தங்கள் குடும்பம் வறுமையில் தவிப்பதாகவும் மூன்று மாத சம்பளத்தை தற்போது உடனடியாக தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தற்காலிக தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் உதகையில் இருந்து கேரளா, கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பிங்கர் போஸ்ட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நகராட்சி தூய்மை பணியாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வாரத்திற்குள் மூன்று மாத கால சம்பளமும் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.