கோவையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி!

கோவை: கோவையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா பயிற்சி நடைபெற்றது.


கோவை: கோவையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா பயிற்சி நடைபெற்றது.

தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா பயிற்சிகள் அளிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 7 மாதங்களாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் யோகா பயிற்சிகள் துவங்கப்பட்டுள்ளது.



அதன்படி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான ஒருநாள் யோகா பயிற்சி முகாம் சோமனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை துவங்கியது. காலை 7 மணி முதல் 8.30 மணி வரை வழங்கப்பட்ட இந்த பயிற்சியில் 80க்கும் மேற்பட்ட ஆண் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த யோகா பயிற்சியினை கருமத்தம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி துவங்கி வைத்தார். இந்த பயிற்சியின் போது மன அழுத்தத்தை குறைப்பது,பொது மக்களுடன் நல்லுறவைப் பேணுவது, நெருக்கடி சூழ்நிலையை கையாள்வது ஆகியவை தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினர்.

கொரோனா வைரஸ் காரணமாக காவல் துறையினருக்கு இணையதளம் மூலம் நடைபெற்று வந்த யோகா பயிற்சி தற்போது மீண்டும் நேரடியாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...