கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து வணிக நிறுவனம் மற்றும் ஜவுளிக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து வணிக நிறுவனம் மற்றும் ஜவுளிக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது,

தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளது. தற்போது அரசின் தீவிர போர்கால நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கொரோனா தொற்று பரவுதலைத் தடுக்க கோவை மாநகராட்சியிலுள்ள அனைத்து ஜவுளிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டுமெனவும், ஒவ்வொரு கடைகளின் முகப்பு வாயில் முன்பு கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.

அதேபோல, வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும், ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து இதுகுறித்த அறிவிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும், வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் ஜவுளிகள் வாங்க பொதுமக்கள் வருகைபுரிவதால் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி நிறுவனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். நோய் தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து நல்கிட வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர், வணிக நிறுவனம் மற்றும் ஜவுளிக்கடை உரிமையாளர்களிடம் தீபாவளி பண்டிகைக் காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான கருத்துக்களையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி அவர்கள், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் அவர்கள், நகர்நல அலுவலர் ராஜா, அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், அனைத்து மண்டல சுகாதார அலுவலா்கள் மற்றும் ஆய்வாளர்கள் மற்றும் ஜவுளி, வணிக நிறுவன உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.