கோவை: கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில், போத்தனூர் - இராமநாதபுரம் பகுதியில் 203 சிசிடிவி கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டது.
கோவை: கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில், போத்தனூர் - இராமநாதபுரம் பகுதியில் 203 சிசிடிவி கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டது.
கோவை இராமநாதபுரம் சந்திப்பில் இருந்து D3, போத்தனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் ரயில்வே மேம்பாலம் நுழைவு வாயில் வரை குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் இப்பகுதிகளில் குற்றங்கள் நடைபெற்றால் விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டும் கேமராக்கள் பொறுத்த கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரன் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது உத்தரவின் படி நஞ்சுண்டாபுரம், S.NV கார்டன், கற்பகம் கார்டன், நேதாஜிநகர், இராமலிங்க ஜோதிநகர், ஸ்ரீபதிநகர் குடியிருப்போர் நல சங்கங்களிடமும் மற்றும் முக்கிய அப்பார்ட்மென்ட்களான பார்சன் அபார்ட்மென்ட் மேபிளவர் அபார்ட்மென்ட் மற்றும் முக்கிய வணிக நிறுவனங்களுடன் CCTV கேமரா பொருத்துவது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் D1 இராமநாதபுரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முருகேசன் அவர்களால்
நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 21 அடிகள் உயரம் மற்றும் கனமான இரும்பு பைப்புகள் 55 நஞ்சுண்டாபுரம் சாலையில் நடப்பட்டும் முக்கியமாக SSVM பள்ளி ஸ்தாபனம் பார்சன் அபார்ட்மென்ட் VR டிரேடர்ஸ் ஆகியோர்கள் மற்றும் முக்கியஸ்ர்களின் பங்களிப்புடன் நஞ்சுண்டாபுரம் பிரதான
சாலையின் மத்தியில் 60 கேமராக்கள் பொருத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக SNV கார்டன் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக 32 கேமராக்களும் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் கடந்த காலங்களில் நடக்க முயற்சித்த பகுதியான கள்ளிமடை செல்லும் வழியில் உள்ள கற்பகம் கார்டன் பகுதியில் கற்பகம் கார்டன்
குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக 16 கேமராக்களும் நேதாஜி குடியிருப்பு பகுதிகளில் 16 கேமராக்களும் மேலும் பார்சன் அந்தாரா குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வழியில் 5 கேமராக்களும், சிவராம்நகர் பகுதியில் சிவராம்நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக 54 கேமராக்களும் என மொத்தம் 203 கேமராக்கள் தற்போது புதிதாக பொருத்தப்பட்டது.