கோவை: கோவையில் சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.91,000 பணத்தை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.91,000 பணத்தை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை - கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழக பகுதியான கே.ஜி.சாவடி பகுதியில் வாகன சோதனை சாவடி உள்ளது. தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் செல்லும் வாகனங்கள் மற்றும் அங்கிருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களின் ஆவணங்களை தீவிர பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை 5 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், ஆய்வாளர் ஆறுமுகம், விசாரணை அதிகாரி துரை ஆகியோர் சோதனையிட்ட போது கணக்கில் வராத 91,000 ரூபாய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, இது தொடர்பாக விசாரணை செய்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வாகன சோதனை ஆய்வாளர் சரோஜா, துணை ஆய்வாளர் அருள், உதவியாளர் கண்ணன் இவர்களுக்கு உதவியதாக சரவணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.