கோவை: கொரோனா தடுப்பூசியில் பாஜக அரசியல் செய்து வருவதாகவும் அதனை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை தன்னுடைய அதிகாரப் பசிக்கு இரையாக்கி தேர்தல் கால அறுவடை செய்த பாரதீய ஜனதாக் கட்சி, இம்முறை நடக்கவிருக்கிற பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் கோவிட் - 19 கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைப் பணயம் வைத்து வாக்கு கேட்கிறது.
நேற்று, பாட்னாவில் பீகார் மாநில "தேர்தல் அறிக்கை" யை வெளியிட்டுப் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தேர்தலில் வெற்றிபெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கோவிட் - 19 வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன், பீகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்" என்று சந்தர்ப்பவாத அரசியல் பேசி இருக்கிறார்.
நாடெங்கும் பல்வேறு மாநிலங்களில் வசித்து கூலி வேலை பார்த்து வந்த பீகார் மக்கள் "லாக் டவுன்" காலத்தில் பலநூறு கிலோ மீட்டர்கள் நடந்தே சொந்த ஊருக்குத் திரும்பிய போது அவர்களை விலங்குகளைப் போல நடத்தி, நெடுஞ்சாலைகளில் அமரவைத்து அவர்கள் மீது கிருமி நாசினி தெளித்த அரசுதானே இந்தக் கொடுங்கோல் அரசு.
கூலித் தொழிலாளிகள் தங்கள் குழந்தைகளோடு கொதிக்கும் வெப்பத்தில் தார்ச்சாலைகளில் நடந்து போன போது போக்குவரத்து வசதி செய்து கொடுக்காமல் கூட வேடிக்கை பார்த்த இரக்கமற்ற கொடூரர்களின் அரசு தானே உங்கள் அரசு, உணவின்றி, கையில் பணமின்றி அபலைகளாய் பீகாரிகள் நாடெங்கும் தெருவில் நின்றார்கள்.
இப்போது தேர்தல் என்றவுடன் பீகார் மக்கள் மீது பாசமும், நேசமும் துளிர்க்கிறதா பாரதீய ஜனதாவுக்கு?
ஒருவேளை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றிபெறாவிட்டால் பீகார் மக்களுக்கு தடுப்பூசி போடப்படாதா? தேர்தல் நடைபெற்று முடிந்த மற்ற மாநிலங்களுக்கு தடுப்பூசி போடப்படாதா? பெருந்தொற்று காலத்தில் நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய முதிர்ச்சியும், அரசியல் நாகரீகமும் இல்லாத பாரதீய ஜனதாவின் கொடூர முகத்துக்கு சட்டமன்றத் தேர்தலில் பீகார் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
கொள்ளை நோய் என்பது உலகளாவிய துயரம், இத்தகைய துயரம் நிறைந்த காலத்தில் சாதி, மத, மொழி, மாநில வேறுபாடுகளின்றி மக்களைக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஆளும் அரசுகளுக்கு உண்டு, தேர்தலை மையமாக வைத்து கொள்ளை நோயின் துயரத்தை, தடுப்பூசி போடுவதை, தேர்தல் வாக்குறுதியாக்குவது இந்திய இறையாண்மைக்கு விடப்படுகிற சவால். இந்திய மக்களை தேர்தல் கால கருவிகளாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் கயமைத்தனம்.
மாநில தேர்தல் ஆணையமும், இந்தியத் தேர்தல் ஆணையமும் இதனை வேடிக்கை பார்ப்பது பீகார் மாநில மக்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமானப்படுத்துகிற காட்டுமிராண்டித்தனம். கொள்ளை நோயையும் தேர்தல் கால வாக்கு அறுவடைக்குப் பயன்படுத்த நினைக்கும் பாரதீய ஜனதாவின் கோர முகத்தை மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.