திருப்பூர்: திருப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 1500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து, வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோரால் தணிக்கை செய்யப்பட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியின் முன்னிலையில் வெளியிட்டார். அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 2,493 வாக்குச் சாவடிகள் இருப்பதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.