Update: கோவையில் திருநங்கை கொலை வழக்கு: பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்ததால், கொலை செய்தேன், பிடிபட்ட நபர் வாக்குமூலம்

கோவை: கோவை சாய்பாபா காலணி என்.எஸ்.ஆர் சாலையில் வசித்து வந்த திருநங்கை சங்கீதா கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக, பிடிபட்ட நபர் அவரது பாலியல் இச்சைக்கு சங்கீதா இணங்க மறுத்ததால், அவரை கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை: கோவை சாய்பாபா காலணி என்.எஸ்.ஆர் சாலையில் வசித்து வந்த திருநங்கை சங்கீதா கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக, பிடிபட்ட நபர் அவரது பாலியல் இச்சைக்கு சங்கீதா இணங்க மறுத்ததால், அவரை கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 



கடந்த புதன்கிழமை, திருநங்கை சங்கீதா (60) கொடூரமான நிலையில் கொலை செய்யப்பட்டு, தண்ணீர் டிரம்மில் அடைக்கப்பட்டு, உடல் அழுகிய நிலையில், சாய்பாபா போலீஸாரால் மீட்கப்பட்டார். அவருடைய இந்த கொலை, திருநங்கைகள் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும், கொலை செய்யப்பட்ட சங்கீதா திருணங்களின் நலனிற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து அவர்கள் தன்மானத்துடன் வாழ பாடுப்பட்டுளார். சமீபத்தில், அவர் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், ட்ரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் பிரத்தியேக உணவகம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். தமிழகத்தில், திருநங்கைகளை கொண்டு நடத்தப்பட்ட முதல் உணவகம் என்ற பெருமையை பெற்றிருந்தது. 

இந்த நிலையில், அவரது கொலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் விரைவில் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்று திருநங்கைகளின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து, போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நாகபட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (23) வயது வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், திருநங்கை சங்கீதாவின் டிரான்ஸ் கிட்சென் பற்றி யூடியூப் வீடியோ மூலம் அறிந்து கொண்டதாகவும், தொடர்ந்து அவரை வேலை வாய்ப்பு குறித்து தொடர்பு கொண்டு பேசியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த 23 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்த ராஜேஷ், சங்கீதாவின் உணவகத்தில் வேலைக்கு சேர்ந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார். 

பின், சங்கீதாவின் வீட்டிலேய தங்கி உணவகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், அவ்வப்போது அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனை கண்டித்த சங்கீதா தன்னை உடனடியாக வேலையை விட்டு செல்லுமாறு தெரிவித்ததோடு, போலீசில் புகார் அளிப்பதாக கூறியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்து அவரை வெட்டிக் கொலை செய்து உடலை தண்ணீர் பிடிக்கும் ட்ரம்மில் அடைத்து துர்நாற்றம் வீசாமல் இருக்க மேலே உப்பைக் கொட்டி விட்டு, வீட்டிலிருந்த 20,000 ரூபாயை எடுத்துச் சென்று புது செல்போன் ஒன்றை வாங்கி கொண்டு சொந்த ஊருக்கு தப்பிச் சென்றதாக ராஜேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

போலீசார் தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்த நிலையில் பாலியல் ரீதியாக தொல்லை காரணமாக கொலை செய்யபட்டு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...