கோவை: கோவையில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தலைமையில் நடந்தது.

கொரோனா தொற்று காரணமாக, கடந்த சில மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் இணையவழியில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதன்படி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது.
விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை இணையவழியில் தெரிவித்து, தீர்வு காணும் வகையில் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
எஸ்.எஸ்.குளம், பேரூர், சூலூர், தொண்டாமுத்தூர், காரமடை, சுத்தல்பேட்டை, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகள் பதிவு செய்து கொண்டு கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி பேசியதாவது:
மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்களால், விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. விவசாயிகளை கலந்து ஆலோசிக்காமல் நிறைவேற்றப்பட்ட சட்டம் இது. இதனை உடனே ரத்து செய்ய வேண்டும்.
கோவையில் நொய்யல் ஆறு சீரமைப்புக்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட குளங்களும் சீரமைக்கப்பட உள்ளன. இதனை கண்காணிக்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். அக்குழுவில், விவசாயிகள், வருவாய்த் துறையினர், பொதுப்பணி துறையினர் இடம்பெற வேண்டும்.
தமிழகத்தில் நில அளவையார் பணியில் பற்றாக்குறை உள்ளது. 35 சதவீதம் மட்டுமே நில அளவையாளர்கள் உள்ளனர். இதனால், விவசாயிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, உடனடியாக, இந்த காலியிடங்களை நிரப்ப வேண்டும்.
சொட்டு நீர் பாசனம் மானியம் தொடர்பாக நடைபெறும் முகாம் குறித்து விவசாயிகளுக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும். மேலும், பல்வேறு திட்டங்களுக்காக விவசாயிகள் சான்றிதழ் வாங்க அரசு அலுவலகங்களுக்கு செல்லும் போது அலைக்கழிக்க படுகின்றனர், இவ்வாறு அவர் பேசினார்.
காணொலி மூலம் நடந்த கூட்டத்தில், பல்வேறு இடங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.