கோவையில் திருநங்கை கொலை வழக்கு: பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததால், கொலை செய்ததாக, கைது செய்யபட்ட நபர் வாக்குமூலம்.
கோவை: கோவை சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர் சாலையில் வசித்து வந்த திருநங்கை சங்கீதா, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 23 வயதுடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று, திருநங்கை சங்கீதா அவரது இல்லத்தில் உடல் அழுகிய நிலையில், தண்ணீர் டிரம்மில் அடைக்கப்பட்ட நிலையில், வெட்டு காயங்களுடன் சடலமாக, மீட்க்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர், ஆர் எஸ் புரம், வடகோவை பகுதியில் திருநங்கைகளுக்கு ட்ரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் பிரத்தியேக உணவகம் ஒன்றை, சமீபத்தில் தொடங்கி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த சாய்பாபா போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்த வந்தனர். இந்த நிலையில், நாகபட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (23) வயது வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தனக்கு முகநூல் மூலம் சங்கீதா மற்றும் அவர் நடத்தி வரும் டிரான்ஸ் கிட்சன் குறித்து தெரியவந்ததாகவும், தனக்கு வேலை வேண்டும் என கூறி சங்கீதாவிடம் பேசியபோது எங்கிருந்து பேசுகிறீர்கள், எப்படி என்னை பற்றிய தகவல் கிடைக்கபெற்றது, என சங்கீதா விசாரித்ததாகவும் கூறிய ராஜேஷ், கடந்த 23 நாட்களுக்கு முன் தான் கோவை வந்ததாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், டிரான்ஸ் கிச்சனில் பணிபுரிந்த ராஜேஷ், சங்கீதா தங்கி இருந்த வீட்டிலேயே தங்கி உள்ளார். சம்பவத்தன்று, அவர் சங்கீதாவை கொலை செய்து டிரம்பில் உப்பை போட்டு உடலை அடைத்து வைத்து சொந்த ஊருக்கு தப்பி சென்றதாக் வாக்குமூலம் அளித்துள்ளாதாக கூறப்படுகிறது. மேலும், பாலியல் ரீதியான காரணம் தான் கொலைக்கான தூண்டுதலாக உள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் காவல்துறை தரப்பில் வெளியாகவில்லை.
தொடர்ந்து, வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.