கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் 13 வயது சிறுமியுடன் பழகி, கடத்திய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

கோவை: கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (21). இவர் கொலை வழக்கில் கைது செய்யபட்டு சிறை சென்று திரும்பியவர்.



கோவை: கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (21). இவர் கொலை வழக்கில் கைது செய்யபட்டு சிறை சென்று திரும்பியவர்.

இவருக்கு சிறையில் இருந்தபோது, கஞ்சா விற்பனை தொடர்பாக கைது செய்யபட்ட கணபதி பகுதியை சேர்ந்த அமர்நாத் (21) மற்றும் மதுரையை சேர்ந்த வல்லரசு ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சண்முகதிற்கு 13 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் நண்பராகி உள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு, சிறுமி காணாமல் போகவே பெற்றோர்கள் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், காணாமல் போன சிறுமி புலியகுளம் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைக்க பெற்றதை, தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். தொடர்ந்து, போலீசாரின் விசாரனையில் சிறுமியை கடத்த சண்முகத்தின் நண்பர்களான அமர்நாத், வல்லரசு மற்றும் பெண் ஒருவர் உதவியது தெரியவந்தது.

இதனையடுத்து, சிறுமியை கடத்தி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை கடத்த உதவிய பெண்னை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...