கோவை: கோவை போத்தனூர் கணேசபுரம், விட்டல் நகர் பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் (28). தனியார் நிறுவனம் ஒன்றில் மார்கெட்டிங் பணி செய்து வருகிறார்.
கோவை: கோவை போத்தனூர் கணேசபுரம், விட்டல் நகர் பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் (28). தனியார் நிறுவனம் ஒன்றில் மார்கெட்டிங் பணி செய்து வருகிறார்.
சுந்தராபுரம்- மாச்சம்பாளையம் சாலையில் உள்ள திரையரங்கு முன்பு நின்று கொண்டு இருந்தவர், அவ்வழியாக, தம்பியுடன் வந்த 16 வயது பெண்ணிற்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து உள்ளார்.
அந்த பெண் சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் சுதர்சனை பிடித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சுதர்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைத்தனர்.