கோவையில் கொலை செய்யப்பட்ட திருநங்கை சங்கீதாவுக்கு கல்கி சுப்பிரமணியம் இதய அஞ்சலி!

கோவை: கோவையில் திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக போராடிய திருநங்கை சங்கீதா தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் திருநங்கைகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக போராடிய திருநங்கை சங்கீதா தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் திருநங்கைகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாய்பாபா காலனி என்எஸ்ஆர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் பின்புறம் ஒரு குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வந்தவர் சங்கீதா (58). திருநங்கையான இவர் தங்கள் இன நல்வாழ்வுக்காக தனி அமைப்பை தொடங்கி அவர்களுக்காகவே பாடுபட்டு வந்தார். திருநங்கைகளின் படிப்புகளுக்கு உதவி வந்தார்.

அதேபோல, வடகோவை பகுதியில் டிரான்ஸ் கிச்சன் என்ற உணவு விடுதியை தொடங்கி நடத்தி வந்தார். இது முற்றிலும் கொரோனாவால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்காகவே தொடங்கினார். இந்த உணவகத்தில் முற்றிலும் திருநங்கைகளே பணிபுரிந்து வந்தார்கள்.

மேலும், இங்கு தயாரிக்கப்படும் அனைத்து உணவும் கோவை மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகும். இந்த நிலையில், சங்கீதாவின் வீட்டருகே ஒரு டிரம் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக சாய்பாபா கோயில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டிரம்மை திறந்து பார்த்தனர். அப்போது அதில் சங்கீதா சடலமாக இருந்தார். அதில் உப்பு நிரப்பப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அந்த பகுதிக்கு மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவையில் கொலை செய்யப்பட்ட திருநங்கை சங்கீதாவுக்கு திருநங்கை கல்கி சுப்பிரமணியம் இதய அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...