கோவை: கோவையில் திருநங்கையை படுகொலை செய்து உடலை ட்ரம்மில் போட்டுச் சென்ற விவகாரத்தில் துர்நாற்றம் வீசாமல் இருக்க உடலின் மீது உப்பை கொட்டிச் சென்ற கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சாய்பாபா காலணி என்.எஸ்.ஆர் சாலையில் வசித்து வந்த திருநங்கை சங்கீதா, சமீபத்தில் வடகோவை பகுதியில் திருநங்கைகளின் மேம்பாட்டிற்கு ட்ரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் உணவகம் ஒன்றை துவக்கி நடத்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று உடல் அழுகிய நிலையில் உடலில் வெட்டுக்காயங்களுடன் ட்ரம்மில் அடைக்கப்பட்ட நிலையில், சடலமாக சங்கீதா மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், கடந்த 18-ம் தேதி முதல் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திருந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருநங்கை சங்கீதாவின் தொலைபேசி அழைப்புகளை கொண்டும், அவர் வீடு மற்றும் உணவகத்திற்கு வந்து சென்ற நபர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, திருநங்கை கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உடல் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் ட்ரம்மிலிருந்து துர்நாற்றம் வராமல் இருக்க உப்பு கொட்டி வைக்கப்பட்டிருந்த்து போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் தொழில் போட்டியா? அல்லது ஆதாயக்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கொலை செய்து உடல்மேல் உப்பை கொட்டி செல்லும் கொலைக் கும்பல் எவரேனும் உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.