கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆயுத பூஜை, சரவஸ்தி பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டக்கூடாது, என மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஆயுத பூஜை, சரவஸ்தி பூஜை பண்டிகை வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதற்காக வணிக வளாகங்கள், வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றில் வாழை கன்று வைத்து அவர்கள் தொழில் சார்ந்த கணக்கு புத்தகங்கள், காசோலைகள் போன்றவற்றை படையலுடன், பூக்களை வைத்து சாமி கும்பிடுவது வழக்கம்.
இது தவிர, ஆயத பூஜை அன்று வாகனங்களை நன்கு கழுவி சுத்தம் செய்து சந்தனம், பொட்டு பூ மாலை போன்றவற்றை வைத்து பூசை
செய்வது வழக்கம். இது போன்ற பண்டிகை நாட்களில் முடிவில், பயன்படுத்தப்பட்ட மாலைகள், பூக்கள், தோரணங்கள், பிளாஸ்டிக் கவர் என வழக்கத்திற்குமாறாக, மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் சேர்வது வழக்கம்.
எனவே, பண்டிகைகளுக்கு முன்னரே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை, குப்பைத் தொட்டிகள் தவிர பார்க்கும் இடம் எல்லாம் கொட்ட கூடாது என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பண்டிகை நாட்களில் கூடுதலாக வாகனங்கள் மூலம் குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடு, கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என தூய்மை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதே போல், பொது மக்கள் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டாமல் குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்டி சாலைகளை தூய்மையாக வைத்திருக்க உதவ முன்வர வேண்டும்,’’ என்றார்.