கோவை: வால்பாறையில் ரேஷன் கடை கதவுகளை உடைத்த காட்டு யானைகள் அரிசி மற்றும் உணவுப் பொருட்களைச் சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ளது ஆனைமுடி தேயிலைத் தோட்டம். இங்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரேஷன் பொருள் வழங்குவதற்காக மகளிர் குழு மூலம் நியாயவிலைக் கடை இயங்கி வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் பொருட்கள் வழங்குவதற்காக ரேஷன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலையில் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஆனைமுடி தேயிலைத் தோட்டத்தில் உள்ளே புகுந்து ரேசன் கடையை முற்றுகையிட்டது.

தொடர்ந்து ரேஷன் கடையின் ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து, இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்றவற்றை தின்றும், தூக்கி வீசியும் சேதப்படுத்தின.

பின்னர், காட்டுயானைகள் ரேஷன் கடையை உடைக்கும் சத்தம் கேட்டு, தேயிலைத் தோட்ட காவலர்களோடு இணைந்து காட்டு யானைகளை விரட்டினர். சில மணி நேர போராட்டத்திற்குப் பின் காட்டுயானைகள் அங்கிருந்து சென்று அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றன.
இதனை தொடர்ந்து, தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டு உள்ளதால் பொது மக்கள் அச்சத்திலும் பீதியிலும் உள்ளனர். மேலும், ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகம் தடைபட்டுள்ளது.