கோவை: கோவையில் 80க்கும் மேற்பட்ட சிறைத்துறை காவலர்கள் கலந்து கொண்ட கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணியை சிறைத்துறை டி ஐ ஜி சண்முகம் சுந்தரம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் கோவையில் நோய்த்தடுப்பு நடவடிக்கையாக கோவை சிறைத்துறை காவலர்களின் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெற்றது.

இதில் வாகனத்தில் கொரோனா தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பிரச்சார வாகனம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்றனர். மேலும், சிறைத்துறை காவலர்கள் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக முக்கிய சாலைவழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அணிவகுத்து சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் தனிமனித இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்துதல் போன்றவற்றின் அவசியம் குறித்து மக்களிடம். பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கோவை காந்திபுரம் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி போன்றவை வழங்கப்பட்டது.

அதேபோல, கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் முன்பின் தெரியாதவர்களிடம் பேச வேண்டாம், உங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். பொது மக்களுக்கு உதவ கோவை மாநகர காவல் துறையினர் சார்பாக ஆங்காங்கே மக்கள் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மேலும், சந்தேகப்படும் நபர்களை உடனடியாக இந்த மையத்தில் புகார் அளிக்கலாம் என பிரச்சார வாகனத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிறைத்துறை காவலர்களின் பேரணி அமைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், ஜெயிலர் சிவராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.