கோவை: கோவை மார்க்கெட்டுகளுக்கு பெரிய வெங்காய வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.20 வரை குறைந்து ரூ.70 - ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோவை மார்க்கெட்டுக்கு தெலுங்கான, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரபப்டுகிறது. அதே போல் சின்ன வெங்காயமும் அன்டை மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
அண்டை மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரிய வெங்காயத்தின் விளைச்சல் குறைந்தது. இதன் காரணமாக பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்தது. இதனால் பெரிய வெங்காயத்தின் விலை கிடு கிடு வென உயர்ந்து மொத்த விலையில் பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ. 90க்கு மேல் விற்பனை செய்யப்பட்டன. இதே போல் சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ. 100க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே தமிழகத்தில் வெங்காய விலையை கட்டுப்படுத்த எகிப்தில் இருந்து பெரிய வெங்காய இறக்குமதி செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் முதல்கட்டமாக பெரிய வெங்காயம் 150 டன் வந்தது.
இதனிடையே இதன் எதிரொலியாகவும் கோவை மார்க்கெட்டிற்கு அண்டை மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்து காணப்படுவதாலும் விலை குறைந்துள்ளது.
இதுகுறித்து டி.கே மார்க்கெட் அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘ தற்போது கோவைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 250 முதல் 300 டன் வரை பெரிய வெங்காயங்கள் அண்டை மாநிலங்களில் இருந்து வருகின்றன. இதன் காரணமாக வெங்காய விலை குறைந்துள்ளது. ரூ.90க்கு விற்று வந்த பெரிய வெங்காயத்தின் விலை ரூ.70க்கும் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. எகிப்து வெங்காயம் கோவை மார்க்கெட்டுகளுக்கு இன்னமும் வரவில்லை. வெங்காய வரத்து அதிகரித்து காணப்படுவதால் அதன் தேவை பெரும்பாலும் இருக்காது," என்றார்.
பெரிய வெங்காயத்தின் விலை குறைந்தாலும் சின்ன வெங்காயத்தின் விலை குறையாமல் தான் உள்ளது. எனினும் பெரிய வெங்காய விலை குறைவால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.