திருப்பூர் அரசு மருத்துவமனையில் 550 கிராம் எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை!

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் 550 கிராம் எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் 550 கிராம் எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த உதயகுமார் (28) டைல்ஸ் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (25). இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவர் அப்போது 6 மாதம் மட்டுமே கருவுற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டதால் அவருக்கு ஆபரேசன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, அந்த குழந்தை 550 கிராம் எடை மட்டுமே இருந்தது. அரசு மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டது. அதன்படி குழந்தைக்கு மூச்சுத்திணறலை தவிர்க்க வெண்டிலேட்டர் வசதி செய்யப்பட்டது.

மேலும், அதன் நுரையீரலை பலப்படுத்தும் வகையிலும், அதன் வளர்ச்சிக்காகவும் மருந்துகள் வழங்கப்பட்டது. இதேபோல, தாய்ப்பால் பருகுவதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை கடந்த 2 மாதத்திற்கும் மேலாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இதன் எடை தற்போது 1.5 கிலோ ஆகும். குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அக்குழந்தையை அவர்களது பெற்றோர்களுடன் இன்று அனுப்பி வைத்தனர்.

இதற்கு முன்பு திருப்பூர் அரசு மருத்துவமனையில் 750 கிராம் மற்றும் 850 கிராம் எடையில் பிறந்த குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். தற்போது, 550 கிராம் எடையில் பிறந்த குழந்தை காப்பாற்றப்பட்டது இதுவே முதல்முறையாகும். இந்த சாதனையை அரசு மருத்துவமனை நிகழ்த்தியுள்ளது. குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு அரசு மருத்துவமனை டீன் வள்ளி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...