நீலகிரி: குன்னூர் அருகே மேலூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமன் ஆகியோர் இணைந்து பணி நியமன குழு அமைக்காமல் புதிய பஞ்சாயத்து செயலர் பணிக்கு நேர்முக தேர்வு நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி மேலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாகராஜ் தலைமையில் மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் மேலூர் கிராம ஊராட்சி கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு இம்மாதம் 19ம் தேதி புகார் மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது அடையாள போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு ஏற்படுத்தி முறைப்படி நேர்முகத் தேர்வு நடத்தி ஊராட்சி செயலர் பணி நியமனம் நடைபெறவில்லை என்றால் பல்வேறு கட்ட போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட உள்ளதாக மேலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.