கோவை: பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவர் மனைவியான அரசு பள்ளி தலைமையாசிரியர், என இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்து மகளிர் காவல் துறையினர் நடவடிக்கை.

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியரான தங்கவேல் வயது (65). இவரது மனைவி அய்யம்மாள் (55), இவர் அரசு துவக்க பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், தங்கவேல் அவரது மனைவி அய்யாம்மாளை தினந்தோறும் காலை நேரத்தில் பள்ளிக்கு கொண்டு சென்று விடுவது வழக்கம் இந்நிலையில், தினந்தோறும் தலைமை ஆசிரியரான அய்யம்மாளை, தங்கவேல் பள்ளியில் விட்டுவிட்டு, பின்னர், மதிய நேரத்தில் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில், அதே பள்ளியில் பயிலும் ஒரு மாணவியை அழைத்து பாலியல் துன்புறுத்தலில் தங்கவேல் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, தலைமை ஆசிரியர் அய்யம்மாளிடம் பாதிக்கபட்ட மானைவி தெரிவித்த போதும், மாணவியை அடித்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவி வேற பள்ளிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளதால், தங்கவேல் பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார்.
இதில் பயந்துபோன, அந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். மாணவி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான தங்கவேல், அவருக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரான அவரது மனைவி ஆகிய இருவரையும் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் மீது போக்சோ மற்றும் மாணவியை மிரட்டுதல், அடித்தல் போன்ற வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். மேலும், கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.