கோவை மாவட்டத்தில் 223 கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன என அதிகாரிகள் ஆய்வில் தகவல்

கோவை: கோவை மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்துள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திட மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் பழுதடைந்துள்ள கட்டடங்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதில், 223 கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன, என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்துள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திட மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் பழுதடைந்துள்ள கட்டடங்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதில், 223 கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன, என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.



கோவை உக்கடம் அருகே செட்டி வீதியில் கடந்த 6ம் தேதி மழை காரணமாக 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். இச்சம்பவம், கோவை மாவட்ட மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் மிகவும் பழுதடைந்துள்ள நீண்ட காலமாக பயன்படுத்தாமல் ஆபத்து விளைவிக்கக் கூடிய அரசு மற்றும் தனியார் கட்டடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த ஆட்சியர் உத்திரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, ஒவ்வொரு பகுதியிலும் இது போன்ற பழுதடைந்து விழும் நிலையில் கட்டிடங்கள் உள்ளதா? என்பதை உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அலுவலர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘வடகிழக்கு பருவ மழை காலம் நெருங்குவதால், மாவட்டத்தில் உள்ள பழுதடைந்துள்ள கட்டிடங்களை கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன்படி, கோவை மாவட்டத்தில் 223 கட்டிடங்கள் பழுதடைந்துள்ள நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளன. அதில், 13 கட்டிடங்கள் வரை இடித்து அகற்றப்பட்டுள்ளது,’’ என்றார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...