கோவை: கோவையில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு, வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் இப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. இதனிடையே, கோவை காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட நகரின் முக்கிய பஸ்நிலையங்களில் மருத்துவ பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகள், நடைபயிற்சிக்கு செல்லும் பகுதிகளிலும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், வெளியூர் மற்றும் கொரோனா நோய் அறிகுறிகளுடன் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.

இந்த பணியை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்தில் தினமும் 600 முதல் 800 பேர் வரை காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில், அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. தினமும் 100 பேர் வரை இந்த ஒரு முகாமில் மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் பணிகள் தீவிரப்படுத்தப்படும்,’’ என்றார்.