கோவை: கோவை மதுக்கரை பகுதியில் மாசு ஏற்படுத்தும் ஏ.சி.சி சிமெண்ட் ஆலையை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மதுக்கரை பகுதியில் ஏ.சி.சி சிமெண்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து வெளியாகும் மாசு காரணமாக பாதிப்பு ஏற்படுவதாக மதுக்கரை, குரும்பபாளையம் கிராம மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
அதிகளவில் வெளியேறும் மாசு வீட்டின் சுவர்களில் படிவதுடன் உணவு பொருட்களிலும் படிவதால் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டினர். இதனையடுத்து, கடந்த மாதம் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர். பின்னர், நிர்வாக தரப்பு மற்றும் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு மாசு சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறி உள்ளது. இதனையடுத்து, இன்று மதுக்கரை, குரும்பபாளையம் கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஏ.சி.சி சிமெண்ட் ஆலை வளாகத்தில் உள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆலையில் இருந்து வெளியேறும் அதிகளவிலான மாசை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், பல முறை வலியுறுத்தியும் ஆலை நிர்வாகம் கண்டு கொள்வதாக இல்லை என முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், மாசு காரணமாக கண் எரிச்சல், முச்சுதிணறல், வயிறு தொடர்பான பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக போராட்டத்தில் பெண்கள் குற்றம்சாட்டினர்.
இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் காவல் துறையினரும், ஆலை நிர்வாகத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த 15 நாட்கள் ஆலையின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி கொள்வதாகவும் மாசு வெளியேறுவதை கட்டுப்படுத்தி விடுவதாகவும் சிமெண்ட் ஆலை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
ஒவ்வொரு முறையும் பிரச்சனைகள் எழும்போது இது போன்ற வாக்குறுதிகளை கொடுத்து விட்டு நிறைவேற்றுவதில்லை எனவும் ஆகையால், எழுத்துப்பூர்வமாக ஆலை நிர்வாகம் கடிதம் கொடுத்தால் மட்டுமே ஆலைவளாகத்தில் இருந்து வெளியேற முடியும் என கூறி ஆலை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிர்வாக தரப்பினரோ எழுத்து பூர்வமாக எழுதி தர முடியாது என தெரிவித்து உள்ளதால் பெண்கள் ஆலை வளாகத்திலேயே அமர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். போராட்டம் காரணமாக சிமெண்ட் ஆலை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.