'காவலர் நினைவு தினம்' கோவையில் மலர்வளையம் வைத்து 72 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது

கோவை: பணியில் உயிரிழந்த போலீசாரின் வீரவணக்க நினைவு தினம் அக்டோபர் 21 இன்று தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பில் அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவையில் பணியில் இருந்த போது இறந்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.



கோவை: பணியில் உயிரிழந்த போலீசாரின் வீரவணக்க நினைவு தினம் அக்டோபர் 21 இன்று தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பில் அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவையில் பணியில் இருந்த போது இறந்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. 



1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள், காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பணியின்போது, உயிரிழக்கும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது. 



இதன் ஒரு பகுதியாக, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாக அமைக்கபட்டுள்ள, ஸ்தூபியில் மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, கோவை சரக காவல்துறை தலைவர் நரேந்திரன்நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, மாநகர சட்டம் ஒழுங்கு காவல்துறை துணை ஆனையர் ஸ்டாலின், மாநகர் குற்ற பிரிவு காவல்துறை துணை ஆனையர் உமா மற்றும் அதிகாரிகள் பலர் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். 



இதனை தொடர்ந்து 72 குண்டுகள் முழங்க காவலர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து, கோவையில் கடந்த 1985-ஆம் ஆண்டு, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் காவலர் ராஜரத்தினம் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் பிரபல ரவுடி பாபு என்பவரை பிடிக்கச் சென்ற போது, அவருடன் ஏற்பட்ட தகராறில் ராஜரத்தினம் கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். 



தமிழக காவல்துறை இந்த தியாகத்தை போற்றும் வகையில் காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் (கிழக்கு) ஈஸ்வரன், சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் மற்றும் போலீசார், இன்று ராஜரத்தினம் வீட்டிற்கு சென்றனர். அங்கு, அவர் மனைவி சாந்தம்மாளை சந்தித்து ஆறுதல் கூறினர். 

பிறகு, வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், போலீசாரின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...