கோவை: தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி கோவையில் இன்று காலை நடைபெற்றது. இதில் தெற்கு, வடக்கு, பீளமேடு, கணபதி ஆகிய தீயணைப்பு மீட்பு பிரிவினர், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பேரணியானது கோவை தெற்கு தீயணைப்பு மீட்பு அலுவலகத்திலிருந்து தொடங்கி, கோவை அவிநாசி மேம்பாலம், அண்ணாசாலை ஆகிய பகுதிகள் வழியாக சென்று, மீண்டும் தெற்கு தீயணைப்பு மீட்பு துறை அலுவலகத்தை வந்தடைந்தது.

பேரணியின்போது, கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை, தீயணைப்பு வீரர்கள் கையில் ஏந்தியபடி சென்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர் ரா.ஜெகதீஷ், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.