2017 ஆம் ஆண்டு ஏடிம் கொள்ளை வழக்கில் தீர்ப்பு..! திறம்பட கையாண்ட காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

கோவை: கோவையில் 2017 ஆம் ஆண்டு, பீளமேடு மற்றும் தண்ணீர் பந்தல் பகுதிகளில் ஏடிம் இயந்திரங்களை உடைத்து, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



கோவை: கோவையில் 2017 ஆம் ஆண்டு, பீளமேடு மற்றும் தண்ணீர் பந்தல் பகுதிகளில் ஏடிம் இயந்திரங்களை உடைத்து, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது, சம்பந்தமாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள்‌ கொடுத்த புகாரின்‌ பேரில்‌ பீளமேடு குற்றப்பரிவு காவல்நிலையத்தில்‌ மூன்று வழக்குகள்‌ பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து புலன்‌ லிசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில், வடமாநிலத்தை சேர்ந்த குற்றவாளிகளுக்கு, இன்று, கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும்,

வழக்கை துரிதமாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க பணிபுரிந்த காவலர்களுக்கு, காவல் ஆணையர் சுமித் சரண் மற்றும் காவல் துணை ஆணையர்‌ (குற்றம்) உமா ஆகியோர்‌ வெகுவாக பாராட்டினர்‌.



வழக்கின் குற்றவாளிகளாக, இஸ்லாமுதின்‌ (45), ஹரியானா, முஸ்தாக்‌ (32), உத்திரபிரதேசம்‌, ஜூல்பிகர்‌ (25), புதுடெல்லி, மோசம்கான்‌ (34), ராஜஸ்தான்‌, சுபைர்‌ (19), ராஜஸ்தான்‌, அமித்குமார்‌ (25), ஹரியானா, சுபைர்‌ (32), முபாரக்‌ (30)‌, ராஜுங்தான்‌, ஆமின்‌ (35)‌. ஹரியானா ஆகிய குற்றவாளிகளுக்கு, எதிரான வழக்கு மூன்று ஆண்டுகளாக, நடைபெற்று வந்த நிலையில், ஜுூல்பிகர்‌, மோசம்கான்‌, சுபைர்‌, அமித்குமார்‌.



சுபைர்‌, முபாரக்‌, ஆமின்‌ ஆகியோர்‌ மீது நீதிமன்றத்தில்‌ நடைபெற்று வந்த வழக்கில் நீதித்துறை நடுவர்‌, ஞானசம்பந்தம்‌, 19.10.2020-ஆம்‌ தேதி தீர்ப்பு வழங்கினார்‌.

தீர்ப்பில்‌ மேற்படி குற்றவாளிகள் சதிச்செயலில்‌ ஈடுபட்டதற்காக பிரிவு 120 (8) -ன்‌ கீழ்‌ 3 ஆண்டுகள்‌ கடுங்காவல்‌ தண்டனையும்‌, ரூ.10,000/- அபராதமும்‌, அபராதம்‌ கட்டத்‌ தவறினால்‌ 6 மாதங்கள்‌ கடுங்காவல்‌ தண்டனையும்‌ விதிக்கப்பட்டது.

மேலும், இரவில்‌ அத்துமீறி ATM அறைக்குள்‌ குற்ற நோக்குடன்‌ நுழைந்ததற்காகவும்‌, வங்கி பணத்தை திருடியதற்காகவும்‌ முறையே பிரிவுகள்‌ 457, 380 ஐபிசி கீழ்‌ 3 ஆண்டுகள்‌ சிறை தண்டனையும்‌, ரூ.10,000/- அபராதமும்‌, அபராதம்‌ கட்டத்‌ தவறினால்‌ 6 மாதங்கள்‌ கடுங்காவல்  தண்டனையும்‌ விதிக்கப்பட்டது. இரு, தண்டனையையும், தனித்தனியாக அனுபவிக்க வேண்டும்‌ என்றும்‌ தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும்,‌ குற்றவாளி சுபைர்‌ என்பவர் ஆயுதத்தை பயன்பருத்தியதற்காக ஆயுதச்‌ சட்டப்பிரிவு 25 (1-8) (8) -ன்‌ கீழ்‌ 2 ஆண்டுகள்‌ கடுங்காவல்‌ தண்டனையும்‌. ரூ.5000/- அபராதமும்‌, அபராதம்‌ கட்டத்‌ தவறினால்‌ 3 மாதங்கள்‌ கருங்காவல்‌ தண்டனையும்‌ விதிக்கப்பட்டது.

சுபைருக்கு ஆயுதச்‌ சட்டப்பிரிவு 25 (1-8) (3)-ன்‌ கீழ்‌ 2 ஆண்டுகள்‌ கடுங்காவல்‌ தண்டனையும்‌, ரூ.5000/- அபராதமும்‌. அபராதம்‌ கட்டத்‌ தவறினால்‌ 3 மாதங்கள்‌ கடுங்காவல்‌ தண்டனையும்‌ விதிக்கப்பட்டது. இஸ்லாமுதின்‌, முஸ்தாக்‌ ஆகியோர்‌ மீதான விசாரணை நீதிமன்றத்தில்‌ நடைபெற்று வருகிறது.

இதேபோல்,‌ மற்றொரு ஏ டி எம் ஐ உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த வழக்கில்‌ மேற்படி எதிரிகளுக்கு பிரிவுகள்‌ 120 (8), 457, 511 ஆகியவற்றின்‌ கீழ்‌ 2 ஆண்டுகள்‌ கடுங்காவல்‌ தண்டனையும்‌. ரூ.1000/- அபராதம்‌, அபராதம்‌ கட்டத்‌ தவறினால்‌ 3 மாதங்கள்‌ கருங்காவல்‌ தண்டனையும்‌ வழங்கி இவற்றை ஏக காலத்தில்‌ அனுபலிக்கும்‌ படி தீர்ப்பளிக்கப்பட்டது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.06.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...