கோவையில் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று நூதன முறையில் நகைகளை திருடி சென்ற நபருக்கு போலீசார் வலைவீச்சு!

கோவை: கோவையில் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று நூதன முறையில் நகைகளை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று நூதன முறையில் நகைகளை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை நாடார் வீதி பகுதியை சேர்ந்த சின்னசாமியின் மனைவி ஜெயலட்சுமி(68). கடந்த 16ம் தேதி மதியம் ஒரு மணியளவில் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, ஜெயலட்சுமியிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஜெயலட்சுமி கழுத்தில் இருந்த நகையை கழட்டி பத்திரமாக வைத்து கொள்ளும்படி கூறியுள்ளார். இந்த பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபடுபவர்கள் அதிகமாக உள்ளார்கள் என்றும் கூறி நம்ப வைத்துள்ளார்.

இதனை நம்பிய அவர் நகையை ஒரு பையில் போட்டு அந்த நபரின் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். காந்திபுரம் பகுதியில் ஜெயலட்சுமியை இறக்கி விட்ட அந்த மர்ம நபர் நகைகளுடன் தப்பிச் சென்றார்.

பின்னர், இது குறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் அந்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...