கோவை: மத்திய, மாநில அரசு பணிகள் வாங்கி தருவதாக கூறி 65 லட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட மூவர் மீது வழக்குபதிவு செய்த கோவை மாநகர குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த அசோக்குமார்(38) வடவள்ளி பகுதியில் மழலையர் பள்ளி வைத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் செய்வதற்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்ததை கண்டு பலர் நேர்முக தேர்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் வடவள்ளி பகுதியை சேர்ந்த டீனா என்பவர் தேர்வாகி பணிபுரிந்து வந்துள்ளார். டீனா மூலமாக அவரது கணவர் ஜோஆண்டனி மற்றும் அவரது தாயார் ஸ்டெல்லா உமாராணி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, மத்திய மாநில அரசு துறைகளில் தங்களுக்கு செல்வாக்கு உள்ளதாகவும் யாருக்காவது பணி நியமனம் வேண்டுமென்றால் தாங்கள் செய்து தர தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். இதனை நம்பி அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்களிடமிருந்து 5 லட்சம், 10 லட்சம் என எட்டு பேர் 65 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர்.
பணத்தை வாங்கும் போது 45ல் இருந்து 60 நாட்களுக்குள் வேலை வாங்கி தருவதாகவும் இல்லையெனில் பணத்தை திருப்பி கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். பணத்தை பெற்று கொண்டவர்கள் வீடு, கார், நிலம் வாங்கி, விற்பது உள்ளிட்டவைகளை செய்து வந்ததாகவும் பணத்தை திருப்பி கேட்டபோது மிரட்டல் விடுத்ததாகவும் இதேபோல, பலரிடம் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் புகார்தாரர் அசோக்குமார் தெரிவித்தார்.
பின்னர், அசோக்குமார் அளித்த புகாரை தொடர்ந்து மாநகர குற்றபிரிவு போலீசார் ஜோஆண்டனி, அவரது மனைவி டீனா, மற்றும் டீனாவின் தாயார் ஸ்டெல்லா உமாராணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.